உள்நாட்டில் உற்பத்தியாகும் எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் சார்பை குறைத்து, வலுவான எரிசக்திச் சூழலமைப்பை உருவாக்க முடியும் என்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) தெரிவித்துள்ளது.
அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, தனது பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூலம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை வழங்கி வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்குவது ஆகிய நோக்கங்களுடன் இந்த எத்தனால் கலப்பு திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஹெச்பிசிஎல் விளக்கமளித்துள்ளது.
மேலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் ஒரே இரவில் மாறக்கூடும்; ஆனால் நாட்டுக்குள் தயாரிக்கப்படும் எத்தனாலின் விலைகள் அதேபோல் திடீரென மாறுவதில்லை என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விநியோகச் சங்கிலியில் உள்நாட்டு பங்களிப்பை உயர்த்துவதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி, விநியோக அமைப்பை மேலும் உறுதியாக்க முடியும் என ஹெச்பிசிஎல் தெரிவித்துள்ளது.





