அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து பைனலில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால், சாம்பியன் யார் என்பதை முன்கணிப்பது கடினம் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு தொடங்குகிறது. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பைனல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு வசதியாக ஜூலை 20-ம் தேதி கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முதல்வர் வி.டி. சதீசன் வெளியிட்டார்.
மாணவர்கள் உள்ளிட்ட கால்பந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விடுமுறை கோரி வெளியிட்ட கோரிக்கைகள் வேகமாக பரவியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.





