அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று இரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு மோத உள்ளன.
இறுதிப் போட்டிக்கு முன்பாக, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி சமூக வலைதளத்தில் அணியின் குழுப் படத்தை பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டார்.
அந்த பதிவில், பைனலில் என்ன நடந்தாலும் அர்ஜென்டினா அணி ஏற்கனவே யாராலும் மறக்கவும் அழிக்கவும் முடியாத வரலாற்றை உருவாக்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். கடினமான தருணங்களில் அனைவரும் ஒன்றாக நின்று மீண்டு வந்தது நினைவில் நிற்கும் விஷயம் என்றும் தெரிவித்தார்.
மேலும், பல ஆண்டுகளாக கிடைத்த பட்டங்களைவிட இந்த முழுப் பயணமே மிகச் சிறந்ததாக இருந்ததாக மெஸ்ஸி கூறினார். அணியின் வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் மற்றும் தேசிய அணியை ஒரு குடும்பமாக இணைத்து வைத்திருக்க தினமும் உழைக்கும் அனைவருக்கும் அவர் நன்றியும் தெரிவித்தார்.





