தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, 7 போலீஸாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் உத்தரவிட்டுள்ளார்.
போடி மெட்டு, முந்தல், குமுளி ஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக கனிமங்கள் மற்றும் கால்நடைகளுடன் செல்லும் வாகனங்களை சோதனை செய்யாமல், பணம் வசூலித்து அனுப்புவதாக புகார்கள் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார்களின் அடிப்படையில், ஜூலை 10 அன்று மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.35,000 கைப்பற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் முந்தல் எஸ்.எஸ்.ஐ. கணேசன், குமுளி எஸ்.எஸ்.ஐ. அய்யப்பன் மற்றும் ஏட்டுக்கள் உமாநாத், பாஸ்கர், அருள் ஆனந்தம், ராஜேஷ் கண்ணன், பாலமுருகன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.





