திரிபுரா காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அனுராக் தன்கர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் பணி நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் அகர்தலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா டிஜிபி அலுவலகத்துக்கு விரைந்தார். தற்கொலைக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை கண்டறிய மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அனுராக் தன்கர் 1994 பேட்சைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி. பல முக்கிய சிபிஐ வழக்குகளை கையாண்ட அனுபவம் கொண்ட அவர், 2025 மே மாதத்தில் திரிபுரா டிஜிபியாக பொறுப்பேற்றார்.

இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.