மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சென்னையில் முதல்வர் விஜய் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருவது தமிழகத்தில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அணை கட்டுமானத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவின் முயற்சியைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆலோசனையில் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.