சிக்கிமின் நம்சி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் உள்ளே இருந்த 27 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சுரங்கம் அமைக்கும் பணியின் போதே நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், மண் சரிவால் நுழைவாயில் முழுமையாக அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிதாக அமைக்கப்பட்டு வரும் அந்த சுரங்கத்தில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால், சிக்கியவர்களை அணுகுவதில் மீட்புப் படையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தொழிலாளர்களின் உறவினர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.