பிரிட்டன் பிரதமராக இருந்த கீர் ஸ்டார்மர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற ஆன்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. கனிஷ்கா நாராயண், நாட்டின் முதல் ஏஐ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பர்ன்ஹாம் அமைச்சரவையில் ஜான் ஹீலி நிதி அமைச்சராகவும், எட் மிலிபண்ட் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், ஷபானா மஹ்மூத் உள்துறை அமைச்சராகவும், வெஸ் ஸ்ட்ரீட்டிங் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இடம்பெற்றுள்ளனர். மேலும் யுவெட் கூப்பர் சுகாதாரத்துறை அமைச்சராகவும், லூசி பவல் கல்வித்துறை அமைச்சராகவும், ஏஞ்சலா ரேனர் வீட்டு வசதி துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கனிஷ்கா நாராயண் பீஹாரில் பிறந்து, சிறுவயதில் கார்டிபிற்கு குடிபெயர்ந்தவர். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலையில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்றதுடன், ஸ்டான்போர்ட் பல்கலையில் எம்.பி.ஏவும் முடித்துள்ளார்.
தற்போது எம்.பி.யாக உள்ள கனிஷ்கா நாராயணின் இந்த நியமனம், பிரிட்டன் அரசில் ஏஐக்கென தனித்துறை அமைச்சுப் பொறுப்பு உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது.





