சர்வதேச போர் பதற்றம் நீடிப்பதும், கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அமெரிக்கா–ஈரான் போர் முழு வீச்சில் மீண்டும் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகமும் சர்வதேச வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளதுடன், தூதரக பேச்சுவார்த்தைகள் முடங்கியதால் மோதல் மேலும் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.

இதன் தாக்கமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 92 டாலராக உயர்ந்துள்ளது. ஜூன் கடைசி வாரத்தில் இது 75 டாலராக இருந்தது.