முன் ஜாமின் வழங்கப்பட்டிருந்தும் இதுவரை ஏன் சரண் அடையவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தவெக (TVK) எம்.எல்.ஏ ஒருவரை பேரம் பேசி ஆட்சி கவிழ்க்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு உயர்நீதிமன்றம் முன்பு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கியிருந்தது.

முன் ஜாமின் பெற்ற நிலையில், போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன் ஜாமின் வழங்கப்பட்ட பிறகும் இருவரும் சரண் அடையவில்லை என்ற நிலையில், சரண் அடையாமல் போலீஸ் தொல்லை செய்யக் கூடாது என்று எப்படி கோர முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.