சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறை (HR&CE) கட்டுப்பாட்டில் உள்ள 8,193 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறநிலையத் துறை வெளியிட்ட தகவலின்படி, நியமன அறிவிப்பு, கோவில் விவரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் உள்ளிட்டவை www.hrce.tn.gov.in இணையதளத்தில் கிடைக்கின்றன.

தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் அல்லது படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி கமிஷனர் அலுவலகங்களுக்கு ஆகஸ்ட் 20 அன்று மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.