மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) அணியின் தலைவரான சரத் பவார், டில்லியில் இன்று (ஜூலை 22) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவரது மகளும் பாராமதி எம்.பி.யுமான சுப்ரியா சுலேவும் கலந்து கொண்டார்.
மாநிலத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவு தொடர்பான விவாதங்களும் தொடர்கின்றன.
இதன் பின்னணியில், சரத் பவார் இண்டி கூட்டணியிலிருந்து தேஜ கூட்டணிக்குச் செல்லக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பாஜகவுடன் மறைமுகத் தொடர்புகள் சமீபத்தில் வேகம் பெற்றதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.
வட்டாரத் தகவலின்படி, இந்த சந்திப்பில் அரசியல் தொடர்பான விஷயங்கள் பேசப்பட்டதாகவும், வரும் நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





