டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, அதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி போராட்டம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை தடுக்க போலீசார் முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 22 அன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் அவசர விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் முறையிட்டனர். ஆனால் நீதிபதிகள் அதனை ஏற்க மறுத்தனர்.
மேலும், இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறி வீடியோக்களை காட்ட முயன்றபோது, இதற்கெல்லாம் நேரமில்லை; இவ்வாறு வீடியோக்களை காட்டி நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.





