புதுடில்லி: சிஜேபி இயக்கத்தின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். அரசு “எந்த நேரத்திலும் எந்த இடத்திலும்” பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று மதியம் முதல் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அரசு முறையாக நான்கு முறை அழைப்பு அனுப்பியுள்ளதாக ஜிதேந்திர சிங் கூறினார். அனைத்து பிரச்னைகளையும், அவர்களுக்கு ஏற்ற இடத்திலும் நேரத்திலும் பேச அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது இளைஞர்களுக்கான அழைப்பு என்றும், ஜே.பி. நட்டாவின் அலுவலகம் அல்லது இல்லம் உள்ளிட்ட எங்கு வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அவர் கூறினார். “கவுரவம் பார்க்கவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆலோசனையில் ஜே.பி. நட்டாவும் தானும் பங்கேற்று தீர்வு நோக்கி முன்னேறுவோம் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மாணவர்களின் நலன் கருதி அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், மாணவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.





