தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வெப்பம் அதிகரிக்கக்கூடிய மாவட்டங்களாக வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையின் படி, ஜூலை 24 முதல் ஜூலை 28 வரை இந்த மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதே காலகட்டத்தில் வெப்பநிலை பெரும்பாலும் இயல்பை ஒட்டியே இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.