புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, அந்த அமைப்புடன் பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா வியாழக்கிழமை தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் அவர் கூறுகையில், சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்ததாகவும், அமைப்பினரின் பிரச்னைகளை அரசு கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.

பிரச்னைகள் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டதாகவும், அவர்களின் நிபந்தனைகளும் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், நாளை மத்திய அரசும் அந்த அமைப்பின் பிரதிநிதிகளும் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக நட்டா தெரிவித்தார்.