வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள்மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், கல்வி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மாணவர்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், அதனால் மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார். பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்த சல்மான் கான், மாணவர்கள் பெற்றோரிடம் திரும்பி வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
அதே பதிவில், சோனம் வாங்சுக்கை குறிப்பிட்டு உண்ணாவிரதத்தை தொடர வேண்டாம் என்றும், தேவையெனில் இதை வேறு நாளில் நடத்தலாம் என்றும் கூறினார். ஏதாவது உணவு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அவர், தேவைப்பட்டால் தன் வீட்டிலிருந்து உணவு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.





