ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டியில் ஹராரேவில் இன்று விளையாடுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்து இந்தியாவை பேட்டிங் செய்ய வைத்தது.
இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் சூர்யவன்ஷி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் தொடக்கமே இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை.
2வது ஓவரிலேயே 8 ரன் எடுத்திருந்த அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே சூர்யவன்ஷி 20 ரன்னில் வெளியேற, இந்திய அணி 29 ரன்னுக்கே 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இதையடுத்து இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் இணைந்து களத்தில் இருந்து இன்னிங்ஸை முன்னெடுத்து வருகின்றனர்.





