நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பது மற்றும் தேர்வு முறைகளை சீரமைப்பது தொடர்பாக புதிய மசோதா கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரீல்ஸ் வீடியோ, புதிய உலக சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோ 24 மணிநேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளைத் தாண்டியதுடன், சுமார் 1 கோடியே 60 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. ஒரே நாளில் அதிக பார்வைகள் பெற்ற வீடியோ என்ற பெருமையையும் இது பெற்றதாக கூறப்படுகிறது.

இதற்கு முன், பிரபல யூடியூபர் ஐஷோஸ்பீட் உலகக்கோப்பை காலத்தில் பிடிஎஸ் குழுவை சந்தித்த போது பதிவிட்ட வீடியோ 24 மணிநேரத்தில் 30 கோடி பார்வைகள் பெற்றதே உலக சாதனையாக இருந்தது.

தற்போது மோடியின் ரீல்ஸ் அந்த சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. தனது பதிவுக்கு கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது என்றும், ஆலோசனைகளை வழங்கிய இளம் நண்பர்களுக்கு நன்றி என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த ரீல்ஸ் மூலம், வினாத்தாள் கசிவுகளை கட்டுப்படுத்தவும் தேர்வு நடைமுறைகளை மேம்படுத்தவும் புதிய மசோதா கொண்டு வரப்படும் என்ற தகவலும் முன்வைக்கப்பட்டுள்ளது.