சிதம்பரம் அருகே கடலூர் மாவட்டத்தில் வீட்டுக்குள் நடந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேல்புவனகிரியில் கீழமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி, இன்று வீட்டில் தனியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது அவர் திடீரென உயிர் பயத்தில் அலறியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது, ஒரு வாலிபன் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





