சென்னை/திருச்சி: திமுகவை தலைமை தாங்க உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி உள்ளதா என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பினார். மேலும், திமுகவில் கனிமொழியா அல்லது உதயநிதியா என்ற விவகாரத்தில் கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்த தயாரா எனவும் அவர் சவால் விடுத்தார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல்குமார், இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். நீட் தேர்வை சீரமைக்க வேண்டும் என சிலர் கூறுவதாகவும், நீட் வேண்டாம் என சிலர் வலியுறுத்துவதாகவும் கூறிய அவர், இந்த சூழலில் திமுக தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.
உதயநிதிக்கு தவறான ஆலோசனை வழங்கப்படுகிறதா என தெரியவில்லை என கூறிய அமைச்சர், “ஜென்சினா டிஎம்கே” என்ற டி-ஷர்ட் அணிவித்து சிலரை அமர வைத்ததாகவும் விமர்சித்தார். “ஜென்சினா” என்ற சொல்லின் அர்த்தத்தை முதலில் புரிந்து கொண்டு, ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் நடந்த நீட் போராட்டத்தில் திமுக புகுந்து குழப்பம் ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். திமுக தலைமை குறித்து கனிமொழி–உதயநிதி இடையே வாக்கெடுப்பு நடத்தட்டும்; “நடத்தட்டும் பார்க்கலாம்” என நிர்மல்குமார் மீண்டும் வலியுறுத்தினார்.





