சீனாவின் ஹூவாங்சு நகரில் நடைபெறும் ஐ.எஸ்.எஸ்.எப். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில் இந்தியாவுக்கு பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. ஈஷா சிங் தங்கமும், மனு பாக்கர் வெண்கலமும் வென்றனர்.

இறுதிப்போட்டியில் ஈஷா சிங் 50க்கு 40 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதே பிரிவில் ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் தொடரிலும் அவர் தங்கம் வென்றிருந்தார்.

முன்னதாக ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், இந்த போட்டியிலும் 28 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

சர்வதேச துப்பாக்கி விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) சார்பில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில் பல்வேறு பிரிவுகளில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.