2026 காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் பளுதூக்குதலில் கிடைத்தது. மகளிர் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு இந்தியாவுக்கு முதலாவது தங்கத்தை உறுதி செய்தார்.
ஞாயிறன்று நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு களமிறங்கினார். இரு சுற்றுகளிலும் அவர் நிலையான திறமையை வெளிப்படுத்தினார்.
ஸ்நாட்ச் மற்றும் க்ளீன் அண்ட் ஜெர்க் சுற்றுகளில் முறையே 85 கிலோ மற்றும் 105 கிலோ தூக்கி, மொத்தம் 190 கிலோ எடையுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றி, போட்டியின் தொடக்கத்திலேயே இந்திய அணிக்கான முக்கியமான சாதனையாகவும், நாட்டின் பதக்க கணக்கை தங்கத்துடன் தொடங்கியதாகவும் அமைந்தது.




