ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் பளுதூக்குதலில் வெண்கலமாக இது வந்துள்ளது.
58 கிலோ பிரிவில் இந்தியாவின் பிந்தியாரணி தேவி மொத்தம் 199 கிலோ எடையை தூக்கி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவுக்கு இந்த போட்டிகளில் 6வது பதக்கம் கிடைத்தது.
இதுவரை இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.
இதற்கு முன், மகளிர் 53 கிலோ பிரிவு பளுதூக்குதலில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான ஞானேஸ்வரி யாதவ் மொத்தம் 199 கிலோ தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். அவர் ஸ்னாட்ச் முறையில் 88 கிலோவும், கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 111 கிலோவும் தூக்கினார்.





