ஜப்பானில் செவ்வாய்க்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ அருகே நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை சேதம் அல்லது பாதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. நிலைமையை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை விரைவாக ஆய்வு செய்து மனித உயிர்களுக்கு முதன்மை அளிக்குமாறு ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவசரகால பேரிடர் மீட்புப் பணிகளில் முழு முனைப்புடன் செயல்படவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, புகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி உள்ளிட்ட மாகாணங்களுக்கு அவசரகால நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.