புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்பி வீடியோ பேஸ்புக்கில் சிறிது நேரம் நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பது மற்றும் தேர்வு முறைகளை சீரமைப்பது தொடர்பாக மாணவர்களுக்கு முக்கிய வாக்குறுதிகளுடன் பிரதமர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவு 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளைத் தாண்டி உலக சாதனை என குறிப்பிடப்பட்டது.

இந்த வீடியோ தற்காலிகமாக அகற்றப்பட்டது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட தவறு என்றும், பின்னர் பேஸ்புக்கில் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் மெட்டா விளக்கம் அளித்தது.

சம்பவம் குறித்து மத்திய அரசு விசாரித்து வருவதாகவும், தற்காலிக நீக்கம் தொடர்பாக விளக்கம் அளிக்க மெட்டா அதிகாரிகளை நேரில் அழைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா செய்தித் தொடர்பாளர், வீடியோ தவறுதலாக அகற்றப்பட்டு பின்னர் மீட்டெடுக்கப்பட்டதாக கூறினார்.