சென்னை வேளச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறப்படும் சம்பவத்தில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ராணிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் மணிமாறன் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், சம்பவ நேரத்தில் அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.




