நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய மதுரை ஐகோர்ட் கிளை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இரு யூடியூபர்களும் சீமான் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விசாரணையில் நீதிபதி விக்டோரியா கவுரி, முதல்வர் தொடர்பான பேச்சுக்காக திமுக எம்எல்ஏ மீது உடனடியாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, சீமான் விவகாரத்தில் இதுவரை ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.

தேர்தலில் வெற்றி அல்லது தோல்வி எதுவாக இருந்தாலும், தமிழக அரசியலில் சீமான் தவிர்க்க முடியாத தலைவராக உள்ளார் எனக் குறிப்பிட்ட நீதிபதி, யூடியூபர்கள் வெளியிட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க உத்தரவிட்டார். மேலும் ஜூலை 28-இன்றே வழக்கு பதிவு செய்து, ஜூலை 29-ல் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.