ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளதாகவும், புதுச்சேரியில் மிக லேசான மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான தாழ்வுப் பாதை நிலவுவதுதான் இந்த மழை வாய்ப்புக்குக் காரணம் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 தேதிகளில் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மலைப்பகுதிகள் மற்றும் கோவை மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





