வரும் ஆகஸ்ட் 12 அன்று நடைபெற உள்ள அரிதான முழு சூரிய கிரகணத்தை நேரலையாக ஒளிபரப்ப உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. பொதுமக்கள் பார்க்கும் வகையில், தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுந்து சூரியன் மறையும் நிகழ்வே முழு சூரிய கிரகணம் எனப்படுகிறது.
வெளியிடப்பட்ட தகவலின்படி, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி, போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் ரஷ்யாவின் வடப் பகுதிகளில் சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்படும் காட்சியை காண முடியும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இது பகுதி கிரகணமாகத் தெரியும்.
இந்த நிகழ்வு மொத்தமாக சுமார் 4 மணி 23 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 இரவில் இது நடைபெறுவதால் இந்தியாவில் இருந்து நேரடியாகக் காண முடியாது; ஆனால் நாசாவின் நேரலை மூலம் பார்க்க முடியும்.





