திருப்பூர் மாவட்டத்தில் ஒரே ஒரு ஒப்பந்த பல் மருத்துவர் பணியிடத்திற்கான நேர்காணலில் 80 பேர் பங்கேற்று, கடும் போட்டி நிலவியது.
மாவட்ட நலச்சங்கத்தின் கீழ், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல் மருத்துவரை நியமிப்பதற்காக கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேர்காணல் நடத்தப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல் மருத்துவம் படித்த இளம் மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர். அரங்கம் நிரம்பிய நிலையில், விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர்.
நேர்காணல் நடைமுறையில் கல்விச்சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பின்னர் நேர்காணல் நடத்தப்பட்டது. தகுதியான ஒருவரைத் தேர்வு செய்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பல் மருத்துவராக நியமிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





