புதுடில்லி: “வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா – 2026” நிறைவேற்றப்பட்டதை, நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வரலாற்றுச் சாதனையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வர்ணித்தார்.

வெளியிட்ட அறிக்கையில், பொதுத் தேர்வு அமைப்பின் நம்பகத்தன்மையை குலைக்கவும் மாணவர்களின் வாய்ப்புகளை சீரழிக்கவும் முயலும் சட்டவிரோத கும்பல்களுக்கு இந்த புதிய சட்டம் வலுவான எச்சரிக்கையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தேர்வுகளில் முறைகேடு செய்ய முயல்வோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில் இந்த சட்டம் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.

இதன் மூலம் தேர்வு நடைமுறைகளில் நம்பிக்கை வலுப்பெற்று, இளைஞர்கள் அச்சமின்றி தங்களின் கனவுகளை நனவாக்க உதவும் என அமித் ஷா குறிப்பிட்டார்.