தமிழகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயங்கியதற்கு முக்கிய காரணம் லஞ்சம் தான் என அமைச்சர் அருண்ராஜ் குற்றம்சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கட்சி நிதி’ என்ற பெயரில் வசூல் செய்யப்பட்ட தொகைகள் காரணமாக முதலீடுகள் பக்கத்து மாநிலங்களுக்கு நகர்ந்ததாக கூறினார். அந்த வசூல்கள் லஞ்சமாக மாறி நிறுவனங்களை தமிழகத்தைத் தவிர்க்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியில் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடப்பதால் முதலீடுகள் தானாகவே வரத் தொடங்கியுள்ளதாகவும், இனி போக்கு மாறும் என்றும் அவர் கூறினார்.

தமிழகம் முதலீடுகளை ஈர்க்கும் முன்னணி மாநிலமாக உருவாகும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே சந்திப்பில், நர்ஸ்களின் நலனுக்காக என்ன செய்யலாம் என்று முதல்வர் விஜய் கேட்டறிந்ததாகவும், பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.