டில்லியில் செப்டம்பர் 12, 13 தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உச்சிமாநாட்டில் பிரிக்ஸ் உறுப்புநாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஜி ஜின்பிங் செப்டம்பர் 12 அன்று இந்தியா வந்து மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
சமீபத்தில் எல்லை ரோந்துப் பணிகள் தொடர்பாக இந்தியா–சீனா இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வருகை இருநாடுகளின் வர்த்தக உறவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு ஜி ஜின்பிங் இந்தியா வருவது இதுவே முதல் முறை. மேலும், மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினும் செப்டம்பர் 12 அன்று இந்தியா வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கும் காலகட்டத்தில், இந்த உச்சிமாநாடு டில்லியில் நடைபெறுகிறது.





