கேரளாவில் நடைபெற்ற ஒரு திருமணம், இரட்டை சகோதரர்கள் இரட்டை சகோதரிகளை மணந்த அரிய நிகழ்வாக பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
குஞ்சுமோன் தாமஸ் - ஜோமோல் தம்பதியரின் இரட்டை மகன்கள் அகில், நிகில்; பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த டோமிச்சன் - மேரிக்குட்டி தம்பதியரின் இரட்டை மகள்கள் மகி, மரியா ஆகியோரை மணந்தனர். குடும்பங்களின் இந்த ஒற்றுமை நிகழ்வை மேலும் தனித்துவமாக்கியது.
திருமணச் சடங்கை பென்டோ, பேஜோ என்ற இரட்டை பாதிரியார்கள் நடத்தி வைத்தனர். மேலும் சர்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெரோன், ஜோஹன் என்ற இரட்டைச் சிறுவர்கள் உதவியாளர்களாக பணியாற்றினர்.
மணப்பெண்கள் கூறுகையில், இரட்டைக் குழந்தைகள் சூழ திருமணம் செய்வது சிறுவயதிலிருந்தே தங்களின் கனவாக இருந்ததாகவும், பெற்றோரும் குடும்பத்தினரும் அதனை விரும்பியதாகவும் தெரிவித்தனர். இது வாழ்நாள் முழுவதும் நினைவாக இருக்கும் அனுபவம் என்றும், நன்மையும் ஒற்றுமையும் நினைவூட்டும் தருணம் என்றும் அவர்கள் கூறினர்.





