இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 41 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு ஜாவாவின் சூர்யபயா நகரிலிருந்து தெற்கு சுலைவெஸியின் மகாசார் நகருக்கு 271 பேருடன் சென்ற கப்பல், மடுரா தீவு பகுதியில் தீப்பற்றியது. இதையடுத்து கப்பலின் கேப்டன் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
தகவல் கிடைத்ததும் அவசரகால மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். அருகில் இருந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்களும் மீட்புப் பணியில் இணைந்து பலரை காப்பாற்றினர்.
காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.





