சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கண்டித்து மாணவர்கள் மற்றும் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டங்களில் பங்கேற்றவர்கள்மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அறவழியில் போராடிய மாணவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எதற்கென விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்தன.

இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட பதிவில், முதல்வர் விஜயின் உத்தரவின்படி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.