சென்னை: 2026 ஆம் ஆண்டுக்கான ‘தி எகனாமிக் டைம்ஸ்’ குடும்ப வணிகம் விருது அப்பல்லோ மருத்துவமனை எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி குடும்ப நிறுவனங்களில் வளர்ச்சி, சிறந்த நிர்வாகத் திறன், தலைமுறை கடந்த பயணத்தில் தொடர்ச்சியான சாதனை போன்ற அம்சங்களில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை ‘தி எகனாமிக் டைம்ஸ்’ நிறுவனம் இந்த விருதுகள் மூலம் கவுரவிக்கிறது.
இந்த ஆண்டுக்கான விருதை அப்பல்லோ நிர்வாக துணைத் தலைவர் பிரீதா ரெட்டி மற்றும் நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து அப்பல்லோ குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி கூறுகையில், ஒவ்வொரு இந்தியருக்கும் உலகத் தரமான மருத்துவ சேவையை கொண்டு சேர்ப்பதே தனது கனவு என்றும், அந்த கனவை தனது மகள்கள் தங்களுடையதாக மாற்றி முன்னெடுத்து வருவதுடன் அதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.




