மஹாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோலின் பாதத்தை அக்கட்சி தொண்டர்கள் கழுவும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிகழ்வு குரு பூர்ணிமா கொண்டாட்டத்தின் போது நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நானா படோல் முன்னர் மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.

வைரலான வீடியோவை தொடர்ந்து பாஜ தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, இதுபோன்ற செயல்கள் காங்கிரஸ் தலைவர்களின் “கலாசாரம்” என்பதை காட்டுவதாக விமர்சித்தார்.

மேலும், இப்படியான நிகழ்வுகளில் ஈடுபட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், இதனால் விமர்சனமும் எதிர்மறை விமர்சனமும் மட்டுமே கிடைக்கும் என கூறினார்.