சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் ஆலையில் திடீரென ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். சம்பவம் ஆத்தூரில் உள்ள சதாசிவபுரத்தில் செயல்படும் ஆலையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து கூடுதல் விவரம் வெளியிடப்படவில்லை.
வாயுக்கசிவு குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சமீப நாட்களில் தொழிற்சாலைகளில் வாயுக்கசிவு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. கடந்த ஜூன் 21-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அதேபோல், ஜூலை 25-ம் தேதி திருவள்ளூரில் அரண்வாயலில் பீர் தயாரிக்கும் தொழிற்சாலையில் லேசான அமோனியா கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 2 ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.





