தாய்லாந்தின் புகெத் நகரிலிருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் கடும் காற்றழுத்த மாற்றம் காரணமாக சில விநாடிகள் குலுங்கியதில் பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
AI2379 என்ற விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட குலுக்கலால் விமானத்தின் நிலைத்தன்மை குறுகிய நேரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகளும் விமான பணியாளர்களும் பதற்றமடைந்தனர்.
அந்த அதிர்வில் தடுமாறி விழுந்த பயணிகள் 12 பேர் காயமடைந்தனர். பைலட் உடனடியாக கட்டுப்பாட்டை மீட்டு விமானத்தை டில்லியில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.
விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தனர். பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே முதன்மை என ஏர் இந்தியா தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதாகவும், விசாரணைக்காக அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாகவும் கூறியது.





