பங்கிபூர் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, பாஜவுக்கும் அதன் தலைமைக்கும் மக்கள் அனுப்பிய எச்சரிக்கை செய்தி என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பங்கிபூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்று, பாஜவிடமிருந்து அந்தத் தொகுதியை கைப்பற்றினார். இதையடுத்து கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடினர்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பீஹாருக்கு “சிறந்த நபரை” முதல்வராக நியமிக்க வேண்டும் என்றும், ஆட்சிக்கு வந்தபோது அளித்த வாக்குறுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கி, மக்கள் மாநிலத்தை விட்டு இடம்பெயர்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், முன்பு இருந்தபடியே பங்கிபூரில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை எனக் கூறிய அவர், இந்நிலையில் மக்கள் பாஜவை தோற்கடித்ததற்கான முக்கிய காரணமாக பீஹாரில் பாஜ அறிமுகப்படுத்திய புதிய தலைமையை சுட்டிக்காட்டினார். அந்த தலைமையின் நடத்தை, குணம் மற்றும் ஆளுமை மக்கள் விருப்பத்திற்கு ஏற்பவில்லை என்பதே காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.





