மத்திய அரசு அனுமதி வழங்கியதும் விண்ணில் செலுத்துவதற்காக, இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இரண்டு செயற்கைக்கோள்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பான ‘நேவிக்’ தொடர்பான ஒரு செயற்கைக்கோள் சுமார் 10 ஆண்டு செயல்பாட்டுக்குப் பிறகு தற்போது காலாவதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-2 மற்றும் என்.வி.எஸ்.-01 ஆகியவை மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பிடங்களை துல்லியமாக அறிய நான்கு செயற்கைக்கோள்கள் இணைந்து செயல்பட வேண்டிய நிலையில், என்.வி.எஸ்.-03 மற்றும் ஜிசாட்-1ஏ ஆகியவை ஏவத் தயாராக ஸ்ரீஹரிகோட்டாவில் வைத்திருக்கப்பட்டுள்ளன.
மத்திய விண்வெளித் துறையின் அனுமதி கிடைத்ததும் எரிபொருள் நிரப்பப்பட்டு, ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





