ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் 370ம் பிரிவை ரத்து செய்தது வரலாற்றில் “புதிய அத்தியாயம்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2019 ஆகஸ்ட் 5 அன்று மத்திய அரசு 370 மற்றும் 35ஏ பிரிவுகளை ரத்து செய்ததை நினைவுகூர்ந்த அவர், அந்த முடிவு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் பயணத்தில் புதிய கட்டத்தை தொடங்கியதாக கூறினார்.
தன் பதிவில், கடந்த ஏழு ஆண்டுகளில் மக்களின் வாழ்வில் பரவலான மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், உள்கட்டமைப்பு வசதிகள் விரிவடைந்ததுடன் கல்வி, சுகாதாரம், தொழில்முனைவு, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் வாய்ப்புகள் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பெண்கள் மற்றும் விளிம்புநிலைச் சமூகங்கள் உள்ளிட்ட பலருக்கு ஆண்டுகளாக மறுக்கப்பட்ட அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள், இந்திய அரசியலமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்டதன் மூலம் உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 5க்கு கூடுதல் முக்கியத்துவம் இருப்பதாக கூறிய மோடி, டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் ஆண்டு கொண்டாட்டம் நடைபெறும் ஆண்டாக இது அமைந்துள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் முன்னேற்றத்திற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.





