சென்னை: தமிழக சட்டசபை இன்று காலை 10.00 மணிக்கு கூடுகிறது. இதில் 2026–27ம் ஆண்டுக்கான மாநில பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நிதி அமைச்சர் மரியவில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். வேளாண் அமைச்சர் வினோத், வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழக அரசு மே 10ம் தேதி பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் விஜயின் ஒப்புதல் பெற்று பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்ஜெட் உரை முன்கூட்டியே அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் புதியவர்கள் என்பதால், உரையை எவ்வாறு வாசிப்பது, எங்கு இடைவெளி விடுவது, எங்கு உவமைகள் பயன்படுத்துவது போன்ற அம்சங்களில் துறை செயலர்கள் மற்றும் அரசியல் பி.ஏ.க்கள் மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.