புதுடில்லி: அடுத்த நிதியாண்டான 2027-28ல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரூபாய் நோட்டு பயன்பாடு தொடங்கியதிலிருந்து காகிதத்தில் அச்சிடப்பட்ட நோட்டுகளே புழக்கத்தில் உள்ளன. இப்போது முதல்முறையாக பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வர உள்ளன.
முதற்கட்டமாக ₹10 மற்றும் ₹20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக, ₹10 மற்றும் ₹20 மதிப்பில் தலா 100 கோடி நோட்டுகள் அச்சிட்டு புழக்கத்தில் விடப்படும் என்று ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.
மேலும், காகித நோட்டுகளை கைவிடும் திட்டமில்லை; அவை தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.





