சென்னை: தமிழக அரசின் மொத்த கடன் நிலுவை ரூ.10.98 லட்சம் கோடி என, ஆக.5ல் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது. இந்த வசதிகளால் பல குடும்பங்கள் ரேஷன் கார்டுகளை பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, அனைத்து வகைகளையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 2.28 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.

இந்த கடன் நிலுவை தொகையையும் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டால், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் சுமார் ரூ.4.80 லட்சம் கடன் சுமை இருப்பதாக கணக்கிடப்படுகிறது.