2021 விடுதலை தீர்ப்பு மாற்றப்பட்டது
2013ல் நடந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் குற்றவாளி என மும்பை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கோவா நட்சத்திர ஹோட்டல் மாநாட்டில் நடந்ததாக குற்றச்சாட்டு
வழக்கின் விவரப்படி, கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டின்போது, தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரை தேஜ்பால் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஆதாரம் போதாது எனக் கூறி கீழ் நீதிமன்றம் விடுவித்தது
இந்த வழக்கில் 2021ஆம் ஆண்டு கோவா கீழ் நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தேஜ்பாலை விடுவித்திருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தண்டனை விவரம் இன்று பிற்பகலில்
நீதிபதிகள் நீலா கோகலே மற்றும் அமித் ஜாம்சண்டேகர் அடங்கிய அமர்வு குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகலில் அறிவிக்க நீதிமன்றம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





