துபாயில் தொழில்நுட்ப உலகை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரபலமான மனித வடிவ ரோபோ ‘பு சுனைதா’ தனது துணை ரோபோ ‘மொசா’வை பாரம்பரிய முறையில் திருமணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பு சுனைதா’ என்பது ஆராய்ச்சி மற்றும் விளக்கக் காட்சிகளுக்காக உருவாக்கப்பட்ட ‘யூனிட்ரீ ஜி1’ வகை ரோபோ. கடந்த ஆண்டு மனிதர்களைப் போல சாலையில் இயல்பாக நடந்த காட்சிகள் மூலம் இது உலகளவில் கவனம் பெற்றது.
செய்திகளின்படி, ஆகஸ்ட் 1-ஆம் தேதி சக ரோபோக்கள் மற்றும் அழைப்பிதழ் பெற்ற விருந்தினர்கள் முன்னிலையில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. மணமகன் பாரம்பரிய ‘கண்டுரா’ அணிந்திருந்தார்; மணமகள் ‘அபயா’ உடையில் தோன்றினார்.
எமிரேட்ஸ் பாரம்பரிய பாடல்கள் ஒலிக்க, வாணவேடிக்கைகளும் நடைபெற்றன. விருந்தினர்கள் நடனம் ஆடி நிகழ்ச்சியை கோலாகலமாக்கினர்.





