சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதிகளை மறுவரையறை செய்யும் நோக்கில் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மறுவரையறை பணிகளால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிக்க, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3.00 மணிக்கு கூட்டம் நடைபெறும்; அதற்கு முதல்வர் விஜய் தலைமை தாங்குவார் என கூறப்பட்டுள்ளது.

மேலும், புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் வாயிலாக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.